இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த ராஜீவ் கத்யால்(53) என்ற பயணி “நான் விமனத்தில் இருந்து இறங்கி பேருந்திற்காக காத்திருந்தேன். அப்போது அங்கிருந்த இண்டிகோ ஊழியர் என்னை தள்ளிப்போய் நிற்குமாறு திட்டினார். திட்டுவதற்கு பதில் பேருந்துக்கு ஏற்பாடு செய்யலாமே என நான் கேட்டேன். என்ன செய்வது என எங்களுக்கு தெரியும். நீங்கள் எங்களுக்கு சொல்லித்தர வேண்டாம் என அவர் கூறினார். அதன் பின் நான் பேருந்தில் ஏறச் சென்றேன். என்னை ஏற விடாமல் தடுத்தனர். மேலும், என்னை கீழே தள்ளி என் கழுத்தை நெறித்தனர்” எனக் கூறினார்.