ரயிலில் தூங்க புதிய கட்டுபாடு

ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (16:12 IST)
ரயில் பயணிங்களின் போது பயணிகள் படுக்கை வசதியை பயன்படுத்த ரயில்வே துறை புதிய காட்டுபாடு விதித்துள்ளது.


 

 
முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் பயணங்களின் போது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் படுக்கை வசதியை பயன்படுத்த முடியும். மற்ற நேரங்களில் பயணிகள் இருக்கை வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இந்த கட்டுபாடில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் அனில் சக்ஸேனா கூறியதாவது:-
 
படுக்கை வசதியை பயன்படுத்துவது தொடர்பாக ரயில் பயணிகளிடையே பிரச்சனை எற்படுவதாக அதிகாரிகளிடமிருந்து புகார்கள் வந்தது. இதனால் இந்த புதிய கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் இந்த சுற்றறிக்கைக்கு முன்பாக ரயிலில் படுக்கை வசதியை பயன்படுத்தும் நேரம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்