இனி சூப்பர் மார்க்கெட்டுகளில் சிலிண்டர் கிடைக்கும்

செவ்வாய், 8 நவம்பர் 2016 (15:50 IST)
சென்னையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் மினி சமையல் சிலிண்டர் விற்பனை செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


 

 
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் தேவையும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. உடன் சிலிண்டர் தட்டுபாடு பிரச்சனையும் அதிகரித்து வருகிறது.
 
இதனால் சூப்பர் மார்க்கெட்டுகளில் மினி சிலிண்டர் விற்பனை செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி சிலிண்டர் தெவை உள்ளவர்கள் ஏதாவது அடையாள சான்றிதழின் நகல் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். 
 
முன்பணமாக ரூ.10,18 செலுத்த வேண்டும். இதில் ரூ.700 சிலிண்டருக்கான விலையும் அடங்கும். உடன் ரெகுலேட்டர் மற்றும் டியூப் போன்றவற்றுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதன்மூலம் இந்தியன் ஆயில் நிறுவனம் அதிக லாபம் ஈட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்