இந்நிலையில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் நாளை டெல்லியில் இருந்து சென்னை வருகின்றனர்.
விமான நிலையத்தில் இருந்து நேராக சத்தியமூர்த்தி பவன் செல்லும் அவர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் கு.செல்வபெருந்தகை, காரிய கமிட்டி உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.