ஆளுனர் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும்: ஸ்டாலின் - ஈபிஎஸ் சந்திப்பு நடக்குமா?

Mahendran

வெள்ளி, 26 ஜனவரி 2024 (16:49 IST)
இன்று மாலை ஆளுநர் மாலையில் நடைபெற இருக்கும் தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறும் என்பதும் இதில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதே போல் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதிமுக இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே இந்த விருந்தில் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதால் இருவருடைய சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்