நீண்ட நாட்களுக்கு பிறகு திறந்த ஒகேனக்கல்! – மக்கள் மகிழ்ச்சி!

திங்கள், 27 செப்டம்பர் 2021 (08:30 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு சுற்றுலா தளங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் சமீப காலமாக சுற்றுலா தளங்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழத்தில் புகழ்வாய்ந்த சுற்றுலா தளமான ஒகேன்னக்கலும் இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்த பரிசல் பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பரிசல் பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 4.30 மணிக்கு மேல் சுற்றுலா வாகனங்கள் உள்ளே வர அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்