கனமழை எதிரொலி: சென்னையில் இறங்க முடியாமல் வானில் வட்டமிடும் விமானங்கள்..!

திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (17:42 IST)
சென்னையின் பல இடங்களில் தற்போது கனமழை பெய்து வருவதாகவும் குறிப்பாக விமான நிலையம் பகுதியில் கன மழை பெய்து கொண்டிருப்பதால் விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமிட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
சென்னை புறநகர் பகுதியில் கடந்த சில ஆண்டு நிமிடங்களாக கன மழை பெய்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இதனால் மூன்று உள்நாட்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இன்னும் சில நிமிடங்கள் மழை தொடர்ந்து நீடித்தால் திருச்சியில் இருந்து 62 பயணிகளுடன் வந்த விமானம், கொச்சியில் இருந்து 127 பயணிகளுடன் வந்த விமானம், மைசூரில் இருந்து 52 பயணிகளுடன் வந்த விமானம் ஆகியவை பெங்களூருக்கு திருப்பி விட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சியில் இருந்து வந்த விமானம் மட்டும் மீண்டும் திருச்சிக்கு செல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்