தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் கனமழை.. குளிர்ந்தது சென்னை..!

திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (17:28 IST)
சென்னை தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருவதாகவும் இதனால் அந்த பகுதி குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதாகவும் குறிப்பாக வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, கந்தன் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
சென்னை முழுவதுமே வெப்பம் தணிந்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை அக்னி நட்சத்திரம் போன்று வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது திடீரென தட்பவெட்ப நிலை மாறி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று இரவு நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அடுத்து இன்றும் மழையை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்