இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வளிமண்டல சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.