பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னைக்கு வருகை தந்து பாஜக தொண்டர்களிடம் ஆவேசமாக பேசினார். அமித்ஷா இந்தியில் பேசியை எச்.ராஜா தமிழில் மொழிபெயர்த்தார். இந்த நிலையில் மைக்ரோ இர்ரிகேஷன் என்ற ஆங்கில சொல்லை அமித்ஷா பயன்படுத்திய நிலையில் அதை உண்மையில் சொட்டுநீர்ப்பாசனம் என்று எச்.ராஜா மொழி பெயர்த்திருக்க வேண்டும். ஆனால் எச்.ராஜா, 'சிறுநீர் பாசனம்' என்று மொழி பெயர்த்தார். இதனை கேட்டுக்கொண்டிருந்த பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சொட்டு நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என்று சொல்லுமளவுக்குத்தான் எச்.ராஜாவின் அறிவு இருப்பதாகவும், கூட்டத்தில் அவரின் மொழிபெயர்ப்பை கேட்ட எத்தனை பேர் வீட்டிற்கு போனதும் சிறுநீர் பாசனத்தை முயற்சி செய்து பார்க்கப்போறாங்களோ? என்றும் நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.