புதுச்சேரியில் சிறுமிக்கு நடந்த கொடூரம் குறித்து அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது பலியான சிறுமி வீட்டிற்கு செல்ல வேண்டாம் என என்னிடம் காவல்துறை கூறியது, எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்துதான் அங்கு சென்றேன், சிறுமியின் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என விரும்பினேன்
ஆனால் அதே நேரத்தில் சட்டங்கள் மட்டும் அனைத்தையும் செய்து விட முடியாது, பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது போல் ஆண் குழந்தைகளை கண்டித்து வளர்க்க வேண்டும், பெண் பிள்ளைகள் தாமதமாக வந்தால் கேட்கும் நாம் ஆண் பிள்ளைகள் இரவு 2 மணிக்கு வந்தால் கூட கேட்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.