மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தென் மாவட்ட அளவில் புகழ் பெற்ற இந்த ஆட்டுச்சந்தையில் தீபாவளி, பொங்கல் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனைக்கு வரும். பண்டிகை நாட்களில் இந்த சந்தையில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையாகும்.
சாதாரண நாட்களில் இந்த சந்தையில் ஆடு ஒன்றின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரம் வரை இருக்கும். ஆனால், இன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.