சமீபத்தில் தமிழக அரசுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து, அதன்படி போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து, பொங்கல் பண்டிகையொட்டி இப்போராட்டத்தை வரும் ஜனவரி 19 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளனர்.
அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை என்று தெரிவித்துள்ளது. அதில், 200 நாட்கள் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத்தொகை வழங்கப்படும். 151 நாட்கள் முதல் 199 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ195 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.