ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி: ஒரு லட்சத்தை தாண்டிய வாக்குகள்..!

வியாழன், 2 மார்ச் 2023 (18:25 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி: ஒரு லட்சத்தை தாண்டிய வாக்குகள்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு இடைத்தேர்தல் நடந்தது என்பதும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன என்பதன் தெரிந்ததே. இந்த நிலையில் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தற்போது வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்ற வாக்குகள் 1,10,556 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று வெற்றியை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். 
 
ஈரோடு காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 65,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் 
 
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்