பாஜகவுடன் கூட்டணி தொடரும்: ஈபிஎஸ் பேட்டி

திங்கள், 31 ஜனவரி 2022 (19:37 IST)
பாஜகவுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி முறிந்தாலும் வருங்காலத்தில் கூட்டணி தொடரும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் திடீரென கூட்டணி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பாஜக தனித்து போட்டியிட்டு வருகிறது 
 
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே அதிமுக பாஜக தனித்தனியே போட்டியிடுவதாகவும் வருங்காலங்களில் கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்தார்
 
மேலும் தற்போதைய தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது என்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து அப்போது முடிவு எடுப்போம் என்றும் எங்கள் குழந்தைகளை வளர்த்தெடுப்பது தான் எங்களுக்கு முதன்மையானது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்