மீண்டும் இணையும் ரங்கஸ்தலம் கூட்டணி!

திங்கள், 31 ஜனவரி 2022 (15:29 IST)
ரங்கஸ்தலம் படத்துக்குப் பிறகு ராம்சரணும் இயக்குனர் சுகுமாரும் இணைய உள்ளனர்.

கடந்த ஆண்டு தென்னிந்தியாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் அது புஷ்பாதான். வட இந்தியாவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இயக்குனர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் மீது புகழ் வெளிச்சம் அதிகமாகியுள்ளது. விரைவில் அவர்கள் இருவரும் புஷ்பா 2 படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

அதன் பின்னர் இயக்குனர் சுகுமார் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்தவகையில் சுகுமார் இப்போது  ராம் சரண் தேஜாவோடு புஷ்பா 2 வுக்கு பிறகு இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் ரங்கஸ்தலம் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்