அண்டை மாநிலமான கேரளாவில் முதல்வர் டீ குடிப்பது, பேருந்தில் செல்வது ஆகியவை சர்வசாதாரணமாக நடந்து வரும் நிகழ்வுகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தில் முதல்வரை அருகில் இருந்து பார்ப்பதே அரிதான காரியமாக இதுவரை இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று கஜா புயல் பாதிப்பை பார்வையிட நாகை மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல் ஓபிஎஸ் ஆகியோர் ரோட்டோர கடையில் டீ குடித்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இந்த நிலையில் புயல் நிவாரண பணியை பார்வையிட்டு திரும்பும்போது திருத்துறைப்பூண்டி டவுன் பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரது டீக்கடைக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அங்கு டீ குடித்தனர். பின்னர் டீ நன்றாக இருந்ததாக டீக்கடைக்காரரை பாராட்டிவிட்டு குடித்த டீக்கு பணம் கொடுத்து சென்றனர். கேரளாவை போல் தமிழகத்திலும் எளிமையான முதல்வரை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.