அரசியல் பழிவாங்குவதை திமுக நிறுத்த வேண்டும் - ஈபிஎஸ் !!

வெள்ளி, 8 ஜூலை 2022 (11:24 IST)
எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

 
ஏற்கனவே கடந்த சில மாதங்களில் ஒரு சில அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சியில் உணவு துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் அவருடைய வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜ் அவரது மகன்கள் உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை, திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 
 
சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காமராஜ் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 
 
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துங்கள். இதை விட்டுவிட்டு மக்களுக்காக பணியாற்றுங்கள் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்