நடக்க போவது அதிமுக பொதுக்குழு கூட்டம் அல்ல... பின்ன வேறு என்ன??

புதன், 6 ஜூலை 2022 (13:02 IST)
எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுவைத்தான் 11 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி. 

 
அதிமுகவில் கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதும், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வரும் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 
 
இந்நிலையில் இதனை விமரித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ். அவர் கூறியுள்ளதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுவைத்தான் 11 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். அது அதிமுக பொதுக்குழு அல்ல. 
 
அதிமுக பொதுக்குழுவுக்கான அழைப்பிதழில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்து இல்லாததால் அது செல்லாது. பொதுக்குழு அழைப்பிதழை தன்னிச்சையாக யாரும் அனுப்ப முடியாது. அப்படி யாரும் அனுப்பினால் அது செல்லாது.
 
எந்த கையெழுத்தும் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளதால் அழைப்பிதழ் போலியா என சந்தேகம் எழுகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு தலைவர் கிடையாது. அதிமுகவில் நடக்கும் சதிக்கும் துரோகத்திற்கும் எடப்பாடி பழனிசாமியே காரணம் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்