மக்களை திசை திருப்புவதற்கான நாடகமே உதயநிதியின் சனாதன பேச்சு: எடப்பாடி பழனிசாமி
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (17:54 IST)
மக்களை திசை திருப்புவதற்கான நாடகமே உதயநிதியின் சனாதன பேச்சு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது என்றும் மக்களை திசை திருப்புவதற்கான நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
பட்டியல் இன மக்களுக்கு துரோகம் அநீதி இழைத்தவர்கள் தான் இன்று சனாதனம் தர்மத்தை பற்றி பேசுகிறார்கள் என்றும் ஊழலை மறைப்பதற்கும் விலைவாசி உயர்வை மறைப்பதற்கும் இன்றைக்கு இந்த நாடகத்தை திமுக அரசு அரங்கேற்று வருகிறது என்று தெரிவித்தார்.
வாரிசு அரசியல் செய்யும் காலம் விரைவில் முடிவு கட்டப்படும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.