மாநில சுய உரிமைக்காக தீர்மானம் நிறைவேற்றிய எடப்பாடி

செவ்வாய், 26 ஜூன் 2018 (13:04 IST)
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானம் எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேறியது.

 
மாநில அணைகளை பாதுகாக்க மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தது. இதற்கான மசோதாவுக்கு கடந்த 13ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தன.
 
இந்நிலையில் மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து இன்று சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அதிரவு அளித்தனர். இதனால் எந்த எதிர்ப்பும் இன்றி இந்த தீர்மானம் நிறைவேறியது.
 
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:-
 
மாநில அரசின் உரிமைகள் இந்த சட்டம் மூலம் பறிக்கப்படுகிறது. இதனால் இந்த மசோதா சட்டமாகுவதை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும். அனைத்து மாநிலங்களுடனும் மத்திய அரசு கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்