அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? எடப்பாடி பழனிசாமி பேட்டி!

செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (13:19 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்து பேசிய நிலையில் இந்த சந்திப்புக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இந்த சந்திப்பு குறித்து விளக்கமளித்தார். 
 
அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரண்டு அணிகள் செயல்பட்டு வரும் நிலையில் அதிமுக குறித்த வழக்குகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பக்கமே தீர்ப்பு வெளியானது
 
இந்த நிலையில் இன்று திடீரென அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றும் கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த கோரிக்கை வைத்தேன் என்றும் நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பிரதமர் மோடியை சந்திக்க எந்த திட்டமும் இல்லை என்றும் எடப்பாடிபழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக போதைபொருள் சர்வசாதாரணமாக கிடைப்பதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் தான் கோரிக்கை வைத்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்