இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பன்னீர் செல்வத்தின் அணியை சேர்ந்த உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழுமலை பேரூராட்சி கழகச் செயலாளர் வாசிமலை மற்றும் உசிலம்பட்டி நகர் கழக ஒன்பதாவது வார்டு கவுன்சிலரான தேவசேனா மற்றும் உசிலம்பட்டி நகரக் கழக துணைச் செயலாளர் கே எஸ் லட்சம் ஆகியோர் இன்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்கள் தலைமையில் மீண்டும் தங்களை தாய்க்கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.