மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளின் பட்டியலை அமலாக்கத்துறை திரட்டி இருப்பதாகவும், விரைவில் சம்மன் கொடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக, நேற்று முன் தினம் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். மாவட்ட ஆட்சியர்களிடம் சுமார் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.