ஷாக் அடிப்பது மின்சாரமா? மின் கட்டணமா? கருப்பு கொடி ஏந்தி வீதிக்கு வந்த ஸ்டாலின்!

செவ்வாய், 21 ஜூலை 2020 (10:27 IST)
மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினரின் போராட்டம் துவங்கியுள்ளது. 
 
லாக்டவுன் காலத்தில் பொதுவாக அனைவருக்கும் பிரச்சனையாக இருக்கும் விஷ்யத்தில் முக்கியமான ஒன்றாக மாறியது மின் கட்டண கொள்கை. இது குறித்து திமுக ஆளும் அரசிடம் கேள்வி எழுப்பியும் வந்தது. 
 
இந்நிலையில் நேற்று, மின் கட்டணக்கொள்ளை மூலம் ஷாக் கொடுக்கும் அடிமை அரசுக்கு கறுப்பு கொடியேற்றி கண்டன முழக்கமிடும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் நாளை நாம் ஷாக் கொடுப்போம். அவரவர் வீட்டின் முன் கறுப்பு கொடியேற்றி கண்டன முழக்கமிடுவோம். தனிமனித விலகல், முகக் கவசம் அவசியம் என போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது திமுக. 
 
அதற்கேற்ப இன்று மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் போராட்டத்தை துவங்கியுள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கறுப்புக்கொடியுடன் மு.க.ஸ்டாலின் போராட்டத்தை துவங்கி வைத்தார். 
 
இதனையடுத்து கைகளில் கறுப்புக் கொடியுடன் தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்