திமுக - மதிமுக தொகுதி டீல் ஓகே : வைகோ ஹேப்பி!

திங்கள், 4 மார்ச் 2019 (15:19 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக - மதிமுக இடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சு வார்த்தைகள் சில நாட்களாக நடந்து வந்தது. 
இந்நிலையில் மதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஆனால் அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இன்னும் கூட்டணித்  தலைமை முடிவு செய்யவில்லை என்று தெரிகிறது.
 
ஏற்கனே திமுக கூட்டணியில் உள்ள  காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகல் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது மதிமுகவுக்கும்  2தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
 

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்