இன்று மாநகராட்சிக்கான மேயர்கள், பேரூராட்சி, நகராட்சிகளுக்கான தலைவர்கள் பதவியேற்று வருகின்றனர். திமுகவுடன் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருந்த நிலையில் சில நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளை திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தது.
இதையடுத்து, முதல்வரும், திமுக கட்சித் தலைவருமான ஸ்டாலின் தற்போது ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், மறைமுகத் தேர்தலில் கட்சித் தலைமையின் அறிவிப்பை மீறி போட்டியிட்டு வென்ற திமுகவினர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பொறுப்பை விட்டு விலகிவிட்டு தன்னை நேரில் வந்து சந்திக்கும்படி தெரிவித்துள்ளார்.