திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசனை நடந்த நிலையில் இதில் அஜோய் குமார் , கே.எஸ் அழகிரி மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிக சீட்டுகள் கேட்டு பெற வேண்டும் என்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 60 தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும் அதை சுட்டிக் காட்டி அதையே தொகுதிகள் பெறப்படும் என்றும் அஜோய்குமார் தெரிவித்தார்
மேலும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களையே திமுக போலீஸ் சிறையில் வைக்கிறது என்றும் மோடிக்கு கருப்பு கொடி காட்டினால் திமுகவுக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கூறினார். இருப்பினும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என முதன் முதலில் திமுக தான் சொன்னது என்பதற்காக அந்த கட்சியிடம் சமூகமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.