அதிமுகவிடம் டீல் பேசுகிறதா திமுக கூட்டணி கட்சிகள்?! – அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை!

வியாழன், 17 செப்டம்பர் 2020 (10:49 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக கூட்டணி கலையலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணியில் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

,முன்னதாக அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தனித்து தேர்தலை எதிர்கொள்ள ஆலோசித்து வருவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். அப்போது தங்களை கூட்டணிக்கு அழைக்க திமுக, அதிமுக இரு கட்சிகளுமே பேசி வருவதாக கூறினார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சிறு சிறு கட்சிகள் முதற்கொண்டு கூட்டணிக்குள் கொண்டு வர இரு பெரும் கட்சிகளும் முயற்சிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் தேர்தல் குறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணி கட்சிகள் பல அதிமுகவில் கூட்டணி அமைக்க வரலாம் என தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா வருகை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்