தீபாவளிக்காக சிறப்பு பேருந்து; குவியும் பயணிகள்! – 1.40 லட்சம் பேர் பயணம்!
செவ்வாய், 2 நவம்பர் 2021 (16:34 IST)
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் 1.40 லட்சம் பேர் இதுவரை பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நவம்பர் 1 முதல் மக்கள் பயணிக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்களில் மொத்தம் 3,726 பேருந்துகளில் 1,40,080 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,01,661 பேர் இதுவரை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.