ஹமூன் புயல் நாளை வங்கதேச கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் எனவும், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவிற்கு கிழக்கு, தென்கிழக்கே 210 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள ஹமூன் புயல் நாளை நண்பகலில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தில் கரையை கடக்க வாய்ப்பு என்றும், வங்கதேசத்தில் கெபுரா - சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,