பாமக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியான நிலையில் அதில் கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்னணி பத்திரிகை ஒன்றில் தங்கர் பச்சான் போட்டியிட விரும்பவில்லை என்றும் அவரது விருப்பத்திற்கு மாறாக அவரை கட்டாயப்படுத்தி போட்டியிட வைத்துள்ளனர் என்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.