சவுக்கார்பேட்டை அம்மா உணவக ஊழியர்களுக்கு கொரோனா!!

புதன், 6 மே 2020 (11:56 IST)
அம்மா உணவக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

 
கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் எதிர்பார்த்ததை விட பலமடங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
 
இந்நிலையில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் 70 பேருக்கு கொடோனா உறுதி செய்யப்பட்டது. 
 
தற்போது, மேலும்  2 அம்மா உணவக ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம், சென்னை சவுக்கார்பேட்டை அண்ணா பிள்ளை தெருவில் அம்மா உணவக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்