தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் வழங்கப்பட்டன.
ஆனால் திமுக கூட்டணியில் பாமக, மக்கள் நீதி மய்யம் உள்பட ஒரு சில கட்சிகள் கூடுதலாக வர இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.