தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு ரொக்கம் இல்லை என்ற அறிவிப்பு காரணமாக ஏராளமான பொங்கல் பரிசை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை இதுவரை வாங்காதவர்களை ரேஷன் கடை ஊழியர்கள் மொபைல் போனில் தொடர்பு கொண்டு வந்து வாங்கிச் செல்லுமாறு கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு பரிசு தொகுப்பை பலர் வாங்காததால் வாங்காதவர் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட அதிகமாக இருப்பதாகவும் அதனால் அதிகம் பேர் வாங்கியதாக கணக்கு காட்ட போனில் அழைப்பு கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.