எது நியாயம்? ; நாளை ஆதார் விவரங்களை வெளியிடுவீர்களா? - ஹெச்.ராஜாவுக்கு சின்மயி பதிலடி

செவ்வாய், 24 அக்டோபர் 2017 (11:56 IST)
நடிகை விஜயின் வாக்களர் அட்டையை இணையத்தில் வெளியிட்டதற்கு பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் விஜயின் மதத்தை வைத்து அவரை விமர்சனம் செய்து வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கு சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகள் கொண்ட வசனம் இடம் பெறுவதாக தமிழிசை சவுந்தராஜான் போர்க்கொடி தூக்கினார். அவரைத் தொடர்ந்து ஹெச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர். முக்கியமாக ஜோசப் விஜய் என தொடர்ந்து அழைத்து வருகிறார் ஹெச்.ராஜா. அதோடு, விஜயின் வாக்காளர் அட்டையை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘உண்மை க்சக்கும்’ எனக் குறிப்பிட்டுருந்தார்.
 
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் ஹெச்.ராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் “எது கசக்கிறது? ஒருவரின் அனுமதியில்லாமல் அவரின் வாக்களார் அட்டையை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதுதான் நியாயமா? நாளை உண்மையை நிரூபிக்க ஆதார் விபரங்களையும் வெளியிடுவீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்