ஆபத்தில் தமிழகம்? சீனாவின் உளவு கப்பல் வந்து சேர்ந்தது!

வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (11:27 IST)
யுவான் வாங் 5 இன்று காலை அந்த கப்பல் அம்பந்தோட்டா வந்து சேர்ந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


சீன அரசு இலங்கைக்கு கடன் கொடுத்தற்காக அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி சீனா, தனது 'யுவான் வாங் 5' என்ற ஆராய்சி கப்பலை அம்பந்தோட்டா துறைமுகத்தில், 6 நாட்கள் நிறுத்தி செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது.

கடந்த ஜூலை 13 ஆம் தேதி சீனாவில் இருந்து புறப்பட்ட உளவு கப்பல், சில நாட்களுக்கு முன் தைவான் கடலில் முகாமிட்டு இருந்தது. அங்கிருந்து புறப்பட்ட இக்கப்பல், இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை அந்த கப்பல் அம்பந்தோட்டா வந்து சேர்ந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கப்பலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏனென்றால் இலங்கையில் இருந்து 750 கிமீ சுற்றளவுக்கு இந்த கப்பலால் உளவு பார்க்க முடியும். அப்படி கணக்கிடுகையில் தமிழகத்தில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் அணு மின்நிலையம் உள்ளிட்ட ஆய்வு மையங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கேரள மாநிலங்களுக்கும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியா அதிகவனத்துடன் இருக்க கூடிய சூழல் உருவாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்