நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மார்ச் 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அதேபோல் மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மார்ச் 11, 18, 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த ரயில் நாகர்கோவில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.10 மணிக்கு சென்னை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும் என்றும் இந்த ரயிலுக்கு இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.