நாடு முழுவதும் 73வது குடியரசு தின விழா ஜனவரி 26ல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் குடியரசு தினவிழா இது என்பதால் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் விழாவுக்காக மேடை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரிசளிப்பு நிகழ்வுகளும், 4 அலங்கார வாகனங்களின் பேரணியும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.