சிறந்த தேர்தல் அதிகாரி; சத்யபிரதா சாகுவிற்கு விருது!

ஞாயிறு, 23 ஜனவரி 2022 (12:03 IST)
மாநில தேர்தல் அதிகாரிகளில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி உள்ளிட்ட பல தேர்தல்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தல்களை சரியாக நடத்தி முடிக்க மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகள் தேசிய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மாநில தேர்தல் அதிகாரிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனவரி 25ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்