எம்பிஏ பசங்களே இவர்கிட்ட கத்துக்கணும்..! – ஆட்டோ டிரைவருக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!

ஞாயிறு, 23 ஜனவரி 2022 (12:54 IST)
சென்னை ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரையின் முயற்சியை பற்றி ஆனந்த் மஹிந்திரா பாராட்டி பேசியுள்ளார்.

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரை. தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்கும் விதமாக பல மொழி செய்திதாள்கள், இலவச வைஃபை, டேப், கொரோனா மாஸ்க், சானிடைசர், மினி டிவி உள்ளிட்ட வசதிகளை செய்து வைத்துள்ளார். ஆனால் இவை எதற்கும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கிடையாது. இதனால் இவரது ஆட்டோவில் பயணிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவரது இந்த சக்சஸ் பார்முலா குறித்தும் வாடிக்கையாளர் சேவை குறித்தும் வோடபோன், ஹூண்டாய், டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களில் செமினார் எடுத்துள்ளார்.

இந்நிலையில் அண்ணாதுரை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா “எம்பிஏ படிக்கும் மாணவர்கள் ஒருநாள் இவருடன் செலவிட்டால் வாடிக்கையாளர் சேவை குறித்து புரிந்து கொள்ளலாம். இவர் ஆட்டோ டிரைவர் மட்டுமல்ல.. மேலாண்மையின் பேராசிரியர்” என புகழ்ந்துள்ளார்.

If MBA students spent a day with him it would be a compressed course in Customer Experience Management. This man’s not only an auto driver… he’s a Professor of Management. @sumanmishra_1 let’s learn from him… https://t.co/Dgu7LMSa9K

— anand mahindra (@anandmahindra) January 22, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்