14 நாட்களில் கொரோனா உச்சம் அடையும்! – சென்னை ஐஐடி கணிப்பு!
திங்கள், 24 ஜனவரி 2022 (08:20 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அடுத்த 14 நாட்களுக்குள் உச்சம் அடையும் என சென்னை ஐஐடி கணித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து சென்னை ஐஐடி மேற்கொண்ட ஆய்வின் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆர் வேல்யூ என்கிற கொரோனா பரவல் விகிதமானது ஜனவரி 14 முதல் 21 வரை 1.57 சதவீதமாக உள்ளது. அதற்கு முந்தைய ஜனவரி 7 முதல் 13 வரை 2.2 சதவீதமாக இருந்துள்ளது.
மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இந்த பரவல் வீதம் 1.0 க்கும் கீழ் உள்ளது. இதனால் சென்னை ஐஐடி கணிப்பின்படி அடுத்த 14 நாட்களுக்கு தமிழகத்தில் கொரோனா உச்சத்தை தொடும் என கூறப்பட்டுள்ளது.