ஆன்லைனில் கஞ்சா டோர் டெலிவரி; அப்டேட் ஆன கடத்தல் கும்பல்! – போலீஸார் அதிர்ச்சி!

வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (08:47 IST)
சென்னையில் ஆன்லைன் மூலம் கஞ்சா டோர் டெலிவரி செய்யும் கும்பலை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் போலீஸ் நடத்திய சோதனையில் கடந்த சில மாதங்கள் முன்னிருந்து ஏராளமான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து 3,546 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் கஞ்சா பொட்டலங்களுடன் வந்த இரண்டு கல்லூரி மாணவர்களை போலீஸார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் சொன்ன இடத்தில் கஞ்சாவை கொண்டு வந்து கொடுத்து செல்வார்கள் என கூறியுள்ளனர்.

அதனால் கஸ்டமர் போல ஆன்லைனில் ஆர்டர் செய்து காத்திருந்த போலீஸார் கஞ்சா சப்ளை செய்ய வந்த ஹரி என்பவரை பிடித்து கைது செய்தனர். ஹரி ஜாம்பஜார் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்