கடந்த சில நாட்களாக கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் வானிலை ஆய்வு மைய சென்னை மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகம் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்தார்.