சென்னையில் விடிய விடிய மழை.. அதிகாலையிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

புதன், 23 ஆகஸ்ட் 2023 (07:33 IST)
சென்னையில் நேற்று இரவு ஆரம்பித்த மழை விடிய விடிய பெய்த நிலையில் இன்று அதிகாலையிலும் பெய்து வருவதை அடுத்து குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை நகர் முழுவதும் நிலவி வருகிறது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்த நிலையில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக வெப்பத்தில் சிக்கி தவித்த பொதுமக்கள் தற்போது குளிர்ச்சியான தட்பவெட்ப நிலையை அனுபவித்து வருகின்றனர். 
 
இன்று அதிகாலை முதல் சென்னையில் உள்ள அடையாறு கிண்டி மயிலாப்பூர் ஈக்காட்டுத்தாங்கல் தியாகராய நகர் தேனாம்பேட்டை அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்