கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. முக்கியமாக சென்னையில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் உள்ளது. மத்திய அரசால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெட்ரோ நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக ராயப்புரத்தில் 158 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. திரு.வி.க நகரில் 94 பேரும், கோடம்பாக்கத்தில் 54 பேரும், அண்ணா நகரில் 53 பேரும், தண்டையார்பேட்டையில் 66 பேரும் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகமாகி உள்ளது. சென்னையில் மொத்தமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது.