இதுவரை சென்னையில் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் பலியாகி, 103 பேர் குணமாகியுள்ளனர். சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் நேற்று முன்தினம் வரை, மணலி மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் மட்டும் தொற்று இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இப்போது அம்பத்தூர் மற்றும் மணலி ஆகிய இடங்களிலும் தலா ஒரு பாதிப்புக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.