கொரோனா எதிரொலி: சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக விமானங்கள் ரத்து!
வெள்ளி, 13 மார்ச் 2020 (09:37 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதிலும் 4720 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 1,28,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் பல நாடுகளுடனான விமான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை விமான நிலையத்திற்கு சவுதி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வர இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் சென்னையில் இருந்து சவுதி, ஓமன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருந்த 17 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.