இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் “கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையிலேயே இருக்க கூடாது என்றும், அதனால் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற திட்டத்தை கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
ரஜினிகாந்த்தின் இந்த முடிவுகளுக்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. ரஜினியின் முடிவுக் குறித்து பேசியுள்ள தமிழக பாஜக முக்கிய தலைவரும், முன்னாள் எம்.பியுமான பொன்.ராதாகிருஷ்ணன் ”ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. அன்று 1996ல் ரஜினிகாந்த் செய்த தவறு திமுகவை ஆட்சியில் அமர வைத்தது. ரஜினிகாந்தின் இந்த அரசியல் பிரவேசம் வரவேற்க தக்கதுதான். ஆனால் தனிக்கட்சி என்று கூறும்போது இது சரியான தருணம் அல்ல” என்று கூறியுள்ளார்.