கடந்த சில வருடங்களாக சென்னையில் பைக் டாக்ஸி அதிகமாகி வருவதை அடுத்து கால் டாக்ஸிகளுக்கு வருமானம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பைக் டாக்ஸிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் அதாவது அக்டோபர் 16, 17 ஆகிய இரண்டு நாட்களும் வாகனங்களை இயக்காமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக கால் டாக்ஸி ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்